நாமக்கல் அருகே கைவரிசை: லாரி திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் கைது | நாமக்கல் செய்திகள் | Dinamalar
நாமக்கல் அருகே கைவரிசை: லாரி திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
10:03

நாமக்கல்: லாரி திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட கும்பலை, போலீசார் கைது செய்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர்.


சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் சமீபத்தில் வாங்கிய, லாரியை சர்வீஸ் செய்வதற்காக நாமக்கல் அருகே காதப்பள்ளியில் உள்ள லாரிப்பட்டறைக்கு கடந்த நவ., 30ல் கொண்டு வந்துள்ளார். அப்போது, லாரியில் இருந்த எண்கள் மாற்றப்பட்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்த பட்டறை பணியாளர்கள், நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக, கண்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், லாரி விற்பனைக்கு வந்தது தெரியவந்தது. லாரியை விற்பனை செய்த நபர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் மாணிக்கம், 51, தனது கூட்டாளிகளான சேலத்தை சேர்ந்த செல்வக்குமார், 49, தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சாமிதுரை, 33, போச்சம்பள்ளியை சேர்ந்த விஸ்வநாதன், 27, சேலம் மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்த சம்பத்குமார், 39, இடைப்பாடியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி, 49, மேட்டூரை சேர்ந்த குணசேகரன், 36, கார்த்திக், 36, ஆகியோர் லாரிகளை திருடி விற்பனை செய்வது அல்லது அதன் மீது தனியார் நிதி நிறுவனங்களில், கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின்னர், அனைவரும் பணத்தை பங்கு போட்டு பிரித்து கொள்வர். இதையடுத்து, ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவல்படி, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், திருட்டு வழக்கில் தலைமறைவாக உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த அக்குபாய் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். மேலும், லாரி திருட்டுக்கு மூளையாக செயல்பட்டு வரும், சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த மாணிக்கம் ஏற்கனவே, பெருந்துறையில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட இரு லாரிகளும், நாமக்கல் வள்ளிபுரம் அருகே திருடப்பட்டது என, போலீசார் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X