தண்டவாளத்தில் விரிசல்: தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
10:31

அரக்கோணம்: தண்டவாளத்தில், இரண்டு இடங்களில் ஏற்பட்டிருந்த விரிசல், உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திலிருந்து தப்பியது.


வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே, அன்வர்த்திகான்பேட்டை- பாணாவரம் இடையே, ரயில் தண்டவாளத்தை, நேற்று காலை, 5:30 மணிக்கு ரயில்வே பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, மகேந்திரவாடியில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.தகவல்படி, அப்பகுதிக்கு வந்து கொண்டிருந்த பெங்களூரு- முசாபூர் செல்லும் யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதன் பின்னால் வந்து கொண்டிருந்த, திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரில் இருந்து, சென்னை செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து, கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அரக்கோணம் ரயில்வே பொறியாளர்கள், விரிசலை தற்காலிகமாக கிளாம் போட்டு சரி செய்தனர். இதனால், காலை, 6:30 மணிக்கு, யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மட்டும் இயக்கப்பட்டது. ரயில் சென்ற சிறிது நேரத்தில், ஏற்கனவே விரிசல் ஏற்பட்ட இடத்தினருகே மீண்டும் விரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த ரயில் மீண்டும் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் காலை, 9:00 மணிக்கு விரிசலை சீரமைத்தனர். அதன்பின், ஒன்றன்பின் ஒன்றாக, குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால், காட்பாடி- அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும், 10க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் தாமதமாக சென்றன. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X