| மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும்: டி.எஸ்.பி., Dinamalar
மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும்: டி.எஸ்.பி.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:24

ஊத்துக்கோட்டை: பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம், ஊத்துக்கோட்டையில் நடந்தது. காவல் ஆய்வாளர்கள் பாலு, அனுராதா ஆகியோர் பங்கேற்றனர்.டி.எஸ்.பி., சந்திரதாசன் மாணவர்கள் இடையே பேசியதாவது:மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி, விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி முடிந்தவுடன், மாணவ - மாணவியர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிற்காமல், வீட்டிற்குச் செல்ல வேண்டும். வெளி நபர்கள் உங்களை பின் தொடர்ந்தால், பள்ளியில் தெரிவிக்க வேண்டும். பள்ளி படிப்பு என்பது, மாணவர்களுக்கு முக்கியமான கால கட்டங்களில் ஒன்று. உங்கள் கவனத்தை சிதற விடாமல், வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற உயர்ந்த இலக்கை அடையும் வகையில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும் போது, தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும் போது மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X