காவல்துறை சான்று சரி பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:25

திருவள்ளூர்: காவல் துறையின் சான்று சரி பார்க்கும் பணியை, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தமிழக காவல் துறை, www.eservices.tn.police.gov.in என்ற இணையதளத்தை பராமரித்து வருகிறது. இதன் மூலம், ஆன்லைனில் புகார் அளிப்பது, காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் விசாரணையும், தற்போது, ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.இந்த வரிசையில், காவல்துறை சான்று சரி பார்ப்பு பணியும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இதுவரை, தனிநபர், நிறுவனங்கள் தங்களது வீடுகளில் வாடகைக்கு உள்ளவர்கள், பணி நியமனம் செய்யப்பட்டோரின் நன்னடத்தை குறித்து அறிய, நேரில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை, அரசு கருவூலத்தில் பணம் செலுத்தி, அதற்கான ரசீது இணைக்க வேண்டும். இதனால், ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது.இது குறித்து, தமிழக காவல் துறை இயக்குனர், அனைத்து மாநகர ஆணையர்கள், காவல் துறை தலைவர்கள், துணை தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:காவல் சரி பார்ப்பு சேவை, விரைவில் காவல் துறையின் இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தனிநபர் விபரம், பணி நியமனதாரர், வாடகைக்கு அமர்த்தப்படுபவர் குறித்து, நன்னடத்தை மற்றும் குற்ற சம்பவம் உள்ளதா... என்பது குறித்து, விபரம் சேகரிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.கட்டணமாக, ஒரு விண்ணப்பத்திற்கு (தனி நபர்) 500; நிறுவனம் 1,000 ரூபாயை, கிரெடிட், டெபிட் மற்றும் நெட் பேங்க் மூலம் செலுத்த வேண்டும்.விண்ணப்பத்தை பெற்றதும், காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நபர் மீது, குற்ற சம்பவம் காவல் துறையில் பதிவாகி உள்ளதா... என, சோதனை செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X