| பதிவு செய்யாத கரும்புகளையும் அனுப்பலாம் Dinamalar
பதிவு செய்யாத கரும்புகளையும் அனுப்பலாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:25

திருவாலங்காடு: கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, இதுவரை பதிவு செய்யாத கரும்புகளையும், விவசாயிகள் அனுப்பலாம் என, நிர்வாக குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நடப்பாண்டில், 4.30 லட்சம் டன் கரும்பு அரவை திட்டமிட்டு, அக்., 5ம் தேதி ஆலையில் அரவை துவங்கப்பட்டது. இந்நிலையில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஆலையின் நிர்வாக குழு கூட்டம் தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் நேற்று நடந்தது.தனி அலுவலர் சாமுண்டீஸ்வரி வரவேற்றார். துணைத் தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், 2018 -- 19ம் ஆண்டிற்கான, கரும்பு அரவைக்கு கொண்டு வரும் லாரி, டிராக்டர்களுக்கு திருத்தி அமைத்த வாடகை வழங்கப்படும். நிர்ணயித்த, 4.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்வதற்கு முன்பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து போதிய கரும்புகள் ஆலைக்கு வரவில்லை. இதனால், பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது கரும்புகளை ஆலைக்கு அனுப்பலாம்.தீப்பற்றி கரும்பு எரிந்தால், அந்த கரும்பை அரவைக்கு எடுத்து கொள்வது உட்பட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறை வுக்கு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X