| வி.ஏ.ஓ.,க்கள்  போராட்டம் Dinamalar
வி.ஏ.ஓ.,க்கள்  போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:25

திருத்தணி: கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றுமுன்தினம் இரவு, தாசில்தார் அலுவலகத்தில், இரவு முழுவதும் தங்கி போராட்டம் நடத்தினர்.திருத்தணி தாலுகா அலுவலகத்தில், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒரு கிராம நிர்வாக அலுவலர் வீதம், மொத்தம், 74 பேர் பணியாற்ற வேண்டும். தற்போது, 48 பேர் மட்டுமே பணியில் உள்ளதால், ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்கள், இரண்டு, மூன்று ஊராட்சிகளில் கூடுதல் பொறுப்பு ஏற்று பணியாற்றி வருகின்றனர்.கூடுதல் பணிக்கு தனியாக ஊதியம், கணினி மூலம் சான்றிதழ்கள் வழங்குவதற்கு இன்டர்நெட் செலவு தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில், மூன்று பெண்கள் உட்பட, 16 வி.ஏ.ஓ.,க்கள், இரவு முழுவதும் தங்கியிருந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X