பிளாஸ்டிக்கை அழிக்க முடியவில்லை | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
பிளாஸ்டிக்கை அழிக்க முடியவில்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:26

ஆர்.கே.பேட்டை: நடைபாதை கடை வியாபாரிகள் நடத்தும் துரித உணவகங்களால், குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவு, மலை போல் குவிந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் இதை முறையாக அகற்றாமல், தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்படுகின்றனர்.ஆர்.கே.பேட்டையில், மாலை நேரத்து நடைபாதை கடைகளில், துரித உணவு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாடிக்கையாளர்களுக்கு பரிமாற பெரும்பாலும், பிளாஸ்டிக் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை, ஆர்.கே.பேட்டையின் வடக்கில் உள்ள ஆற்றங்கரையில் கொட்டி வருகின்றனர். இவற்றுடன், கோழி இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன.வெட்டவெளியில் நெடுஞ்சாலையையொட்டி, கொட்டப்பட்டு வரும் இந்த குப்பையால், அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.அந்த குப்பைக் கிடங்கிற்கு அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் தீ வைத்து எரிப்பதால், பெரும் புகை மூட்டம் ஏற்படுகிறது. தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு, எரியும் பிளாஸ்டிக் குப்பையால், காற்று மாசடைகிறது. மேலும், பிளாஸ்டிக் உருகுவதால் ஏற்படும் வேதிப்பொருட்களின் நாற்றமும், பொதுமக்களுக்கு பெரும் சுவாச பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர்.நகரில், பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை குறைக்கவும், குப்பையை முறையாக மேலாண்மை செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X