விவசாயிகளுக்கு பயிற்சிதிருத்தணி : திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், வேளாண் விரிவாக்க மையத்தின் கீழ் இயங்கி வரும், 'அட்மா' திட்டத்தின் மூலம், மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி, விவசாயி களுக்கு நேற்று வழங்கப்பட்டது.இதில், சத்திரஞ்ஜெயபுரம், வேலஞ்சேரி, அகூர், டி.சி.கண்டிகை, பட்டாபிராமபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து, கரும்பு விவசாயிகள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், வேளாண் உதவி இயக்குனர் முகமதுரபீக், துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருளானந்தம், அனுஷியா ஆகியோர் பங்கேற்று, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டம் குறித்தும், சொட்டுநீர் பாசனம் குறித்தும் விளக்கினர்.6,378 மாணவர்களுக்கு நிலவேம்புதிருத்தணி: திருத்தணி நகராட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம், 29 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும், நகராட்சி ஊழியர்கள் சென்று, நிலவேம்பு கஷாயம் வழங்கி வருகின்றனர்.இது குறித்து நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கூறியதாவது:டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், ஜூன் மாதம் முதல், 29 பள்ளிகளில் படிக்கும், 6,219 மாணவ - மாணவியருக்கு நிலவேம்பு கஷாயம் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இது தவிர, 159 ஆசிரியர்களுக்கும் கஷாயம் கொடுக்கப்படுகிறது.மூன்று முறை வழங்கும் நிலவேம்பு கஷாயம், முதல் சுற்று முடிந்து விட்டது. இரண்டாவது சுற்று, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.உலக எய்ட்ஸ் தினம்திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (மற்றும்) கட்டுப்பாடு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.ஆட்சியர் மகேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில், 'எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக் கூடாது' என, வலியுறுத்தினார். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக. பணியாற்றி வரும் தொண்டு நிறுவனம், காவல் துறையை சேர்ந்தவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.சாய்பாபா கோவிலில் அபிஷேகம்திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, வியாழக்கிழமையையொட்டி, மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது.விழாவையொட்டி, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், சேஜ் ஆரத்தி நடந்தது.12ல் கும்பாபிஷேகம்திருத்தணி: மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலின், மகா கும்பாபிஷேகம், 12ம் தேதி, நடைபெறுகிறது. முன்னதாக, 10ம் தேதி, கோவில் வளாகத்தில் யாகசாலை மற்றும் கலசங் கள் வைத்து, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.தொடர்ந்து, 12ம் தேதி, காலையில் மகா கும்பாபிஷேகம் மற்றும் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.அம்பேத்கர் நினைவு தினம்திருப்போரூர்: திருப்போரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல கட்சிகளின் நிர்வாகிகள், திருப்போரூரிலுள்ள, அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.அதுபோல, திருக்கழுக்குன்றம் ஒன்றிய அலுவலகம், நெரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மலர் அஞ்சலி செலுத்தினர்.மேலும், எஸ்.சி., - -எஸ்.டி., அலுவலர் நலச் சங்கத்தினரால் அரசு அலுவலகங்களில் உள்ள அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.குற்றவாளிக்கு எச்சரிக்கைவாலாஜாபாத்: மூதாட்டி கொலை வழக்கில், தலைமறைவாக இருக்கும் நபர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என, காவல் துறை அறிவித்துள்ளது.வாலாஜாபாத் அடுத்த, கருக்குப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் முனியாண்டி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை, 2010ல் கொலை செய்து, நகைகளை பறித்து சென்றார்.இந்த வழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம், 2ல், நிலுவையில் உள்ளது. 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், ஒருமுறை கூட இவர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.நீதிமன்றத்தில் இன்று முனியாண்டி ஆஜராக வேண்டும். இல்லையெனில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படும் என, காவல் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.