| லட்சுமிபுரம் அணைக்கட்டில் ஓட்டை Dinamalar
லட்சுமிபுரம் அணைக்கட்டில் ஓட்டை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:30

பொன்னேரி: லட்சுமிபுரம் அணைக்கட்டில் உள்ள சிறு ஓட்டைகள் வழியாக தண்ணீர் கசிந்ததால், பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.பொன்னேரி அடுத்த, லட்சுமிபுரம் பகுதியில், ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில், நீர்வரத்து வர துவங்கி உள்ளது.அணைக்கட்டில் இருந்து, பெரும்பேடு ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் சுற்றுச்சுவரின் அடிப்பகுதியில் நீர் கசிவு இருந்து வந்தது.அங்கு, மணல் மூட்டைகள் போட்டு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று, அதில் உடைப்பு ஏற்பட்டு, கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீர் ஆற்றிற்குள் சென்றது.மேலும், அணைக்கட்டில், மூன்று இடங்களில், சிறு ஓட்டைகள் வழியாக தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. கால்வாயின் அடிப்பகுதி மற்றும் அணைக்கட்டின் ஓட்டைகள் வழியாக தண்ணீர் கசிவு ஆகியவற்றால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, தகவல் அறிந்த, பொன்னேரி பொதுப்பணி துறையினர் சென்று, சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அணைக்கட்டில் ஏற்பட்டு கசிவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X