பாலாற்றையொட்டிய குடியிருப்புகளில், 'கஞ்சா' விற்பனை மற்றும் புகைக்கும் இளைஞர்களால், அங்கு வசிப்போருக்கு தொல்லை ஏற்படுகிறது.காஞ்சிபுரம் பாலாற்றை ஒட்டிய பல கிராம இளைஞர்கள், புதர் மறைவிடங்களில், கஞ்சா விற்பதும், புகைப்பதுமாக உள்ளனர்.குறிப்பாக, வாலாஜாபாத் வானுாவர் வீதி, வெங்குடி, புளியம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களைச்சேர்ந்த இளைஞர்கள், அதிகளவில், கஞ்சாவுக்கு அடிமையாகிஉள்ளனர்.இவர்கள், இரவில் கஞ்சா புகைத்து, அரட்டை மற்றும் பிற செயல்களில் ஈடுபடுவதால், அப்பகுதி மக்கள் பீதியடைகின்றனர்; அதே சமயம், இளைஞர்களை நினைத்து வருத்தப்படுகின்றனர்.காவல் துறை நிர்வாகம், இப்பகுதிகளில், இரவு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.
- நமது நிருபர் -