திருப்போரூர்: நெல்லிக்குப்பம் கோவில்களில் அடுத்தடுத்து நடக்கும் திருட்டுக் குற்றங்களால், குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர். போலீசார் இரவு நேரத்தில் ரோந்து வர வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.திருப்போரூர் அருகே நெல்லிக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு வேண்டவராசி அம்மன் கோவில், பெருமாள் கோவில், கெங்கையம்மன் கோவில், ஓமத்தம்மன் கோவில்கள் உள்ளன.கடந்த, 10 நாட்களில் அடுத்தடுத்து, பெரும்பாலான கோவில்களிலும், சிறிய அளவில் திருட்டு நடந்தது. காயார் காவல் நிலையத்தில், இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.தொடரும் திருட்டால், நெல்லிக்குப்பம் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தப் பகுதியில், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதில்லை. இதனால், சமூக விரோதிகள் துணிகர குற்றங் களில் ஈடுபடுகின்றனர் என் கின்றனர், இப்பகுதியினர்.எனவே, இந்த பகுதியில் ரோந்து மற்றும் காவல் பணிகளில், போலீசார் துரிதமாக ஈடுபட வேண் டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.