காஞ்சிபுரம்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும், 18ம் தேதி நடைபெறவுள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட, எரிவாயு, குறைதீர் கூட்டம், மாதந்தோறும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கும். இம்மாதத்திற்கான குறைதீர் கூட்டம், வரும், 18ல், காலை, 11:00 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.எரிவாயு உருளை, 'புக்' செய்வதில் குளறுபடி, மானியம் கிடைக்காதது, எரிவாயு உருளைக்கு கூடுதல் பணம் கேட்பது, எடை குறைவது உட்பட பல புகார்களை, நேரடியாகவும், மனுவாகவும் இக்கூட்டத்தில் நுகர்வோர் தெரிவிக்கலாம்.