காலீஸ்வரர் கோவில் தேர் திருப்பணி நிறைவு 60 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டத்திற்கு ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:35

உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் கோவில் தேர் திருப்பணி முடிவுறும் நிலையில் உள்ளதால், 60 ஆண்டுகளுக்கு பின் சித்திரை விழா தேரோட்டம் நடக்கும் என, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரியில், சிவகாமி சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், இறைவனுக்கும், இறைவிக்கும் தனித்தனியாக கொடி மரங்கள் உள்ளன.மேலும், ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று நிலை ரிஷி கோபுரம் என, இரண்டு பெரிய கோபுரங்களும், ஆறு சிறிய கோபுரங்களும் உள்ளன.கோவில் விசேஷங்களுக்கு தனித்தனியாக மண்டபங்களும், தனியாக யாகசாலைகளும், 1 ஏக்கரில் அழகான குளமும் உள்ளன.இக்கோவிலில், சித்திரை மாதத்தில், சித்திரை விழா விசேஷமாக நடைபெறும். அப்போது, தேரோட்டமும் கோலாகலமாக நடக்கும்.கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், கோவில் தேர் பழுதானதையடுத்து, தேரோட்டம் இல்லாமல் விழா நடக்கிறது.இந்நிலையில், கிராம மக்கள் மற்றும் தனி நபர்களின் உதவியோடு, 60 லட்சம் ரூபாய் செலவில், 37 அடி உயரம் உடைய அழகிய மரத்தேர் செய்யும் பணி, சில மாதங்களாக நடக்கிறது.இப்பணி முடிவுறும் தருவாயில் உள்ளதையடுத்து, வரும் சித்திரை விழாவில் தேரோட்டம் நடத்த, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.பல ஆண்டுகளுக்கு பின், காலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், சிவபக்தர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X