40 பயணியரை காப்பாற்றிய டிரைவர் உயிரிழப்பு: காஞ்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் சோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:42

காஞ்சிபுரம்: பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தி, 40 பயணியரின் உயிரை காப்பாற்றினார்.எனினும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தது, போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கத்தை சேர்ந்தவர், பி.வேதபுரி, 49. அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் பணிமனையில் ஓட்டுனராக பணி புரிந்து வந்தார்.பெங்களூரில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பயணியருடன், நேற்று முன்தினம் காலை, 8:15க்கு புறப்பட்டுள்ளார்.காலை, 11:45 மணிக்கு வாணியம்பாடி, புற்றுக்கோவில் அருகே, மேம்பாலத்தின் மீது பேருந்து சென்ற போது, ஓட்டுனர் வேதபுரிக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளது.சுதாரித்துக் கொண்ட அவர், பேருந்தை ஓரமாக நிறுத்தி, ஓட்டுனர் இருக்கையில் இருந்த படியே, 'ஸ்டீரிங்' மீது சாய்ந்தார்.பஸ்சில் இருந்த பயணியர், 108 ஆம்புலன்ஸ் மூலம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு, வேதபுரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அன்றிரவே அவர் இறந்தார். ரத்த அழுத்தம் அதிகரித்து, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால், அவர் இறந்ததாக கூறப்படுகிறது.உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், பாதுகாப்பாக பஸ்சை நிறுத்தியதால், 40க்கும் மேற்பட்ட பயணியர் உயிர் தப்பினர்.பயணியரின் உயிரை பாதுகாத்து, சிகிச்சை பலனின்றி இறந்த வேதபுரியை நினைத்து, காஞ்சிபுரத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துஉள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X