| பூம்புகார் விருதுக்கு மாணவர்கள் தேர்வு Dinamalar
பூம்புகார் விருதுக்கு மாணவர்கள் தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:45

மாமல்லபுரம்: பூம்புகார் கைத்திற கைவினைஞர் விருதுக்கு, அரசு சிற்பக் கல்லுாரி மாணவர்கள், தேர்வாகினர்.தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக, பூம்புகார் நிறுவனம், அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்களுக்கான கைத்திறன் போட்டியை, அரசு மரபுக்கலை கல்லுாரி மாணவ - மாணவியருக்காக, சில ஆண்டுகளாக நடத்துகிறது.இதில் தேர்வு பெறுவோருக்கு, தலா, 2,000 ரூபாய் பரிசு, வெள்ளி பதக்கம், சான்றிதழ் என, வழங்குகிறது. இப்போட்டி, மாமல்லபுரம், அரசு கட்டட சிற்பக்கலைக்கல்லுாரியில், நேற்று நடத்தப்பட்டது.கல், மரம், சுதை, உலோக சிற்ப, வண்ண ஓவிய மாணவ - மாணவியர், 51 பேர் பங்கேற்றனர்.அரசு விருது பெற்ற சிற்பக்கலைஞர் த.பாஸ்கரன், சிற்ப வடிவம், செயல்திறன் அடிப்படையில், 30 பேரை, பரிசுக்குரியவர்களாக தேர்ந்தெடுத்தார்.சென்னை விழாவில், அவர்களுக்கு பரிசளிக்கப்படும். மாமல்லபுரம் பூம்புகார் மேலாளர், வேலு, கல்லுாரி முதல்வர், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X