| போக்குவரத்து இடையூறு ஆதனுாரில் திடீர் தர்ணா Dinamalar
போக்குவரத்து இடையூறு ஆதனுாரில் திடீர் தர்ணா
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:45

ஆதனுார்: ஊரப்பாக்கம், ஆதனுாரில் போக்குவரத்து இடைஞ்சலாக உள்ள சாலையை சீரமைத்து தர கோரி, பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.ஆதனுாரில் உள்ள ஏரியில் இருந்து அதிக வெள்ளம் வரும் காலத்தில், சமாளிக்க வசதியாக, கண்ணதாசன் நகர், 40 அடி ரோட்டில், மிகப்பெரிய கால்வாய் கட்டும் பணி நடக்கிறது.இதில் கூடுவாஞ்சேரி பகுதியை இணைக்கும் ரோட்டில் இருந்து, 400 மீட்டர் வரை , பாதி அளவு ரோட்டை, பெரிய அளவில் தோண்டி கட்டுமானப் பணி, 40 நாட்களாக நடக்கிறது.இதனால், ஊரப்பாக்கம் - கூடுவாஞ்சேரி உட்பட எந்தப் பகுதிக்கும் இரு சக்கர வாகனம் உட்பட எதிலும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை கண்டித்து, 30க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.இப்பகுதியை நன்கறிந்த, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், கஜராஜன் மற்றும் உதவிப்பொறியாளர் வந்து, பாதிப்பை நீக்க உறுதி கூறினர்.மேலும் அருகே உள்ள, சம்பந்தர் தெரு பகுதியில், மற்றொரு பாதையை சீராக்கவும் உறுதி அளித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X