வடிவமைப்பை இறுதி செய்யாமல் நிலம் எடுப்பு, நில உரிமையாளர்களை வஞ்சிக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:47

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, வடிவமைப்பை இறுதி செய்யாமலேயே, நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.சென்னையில், பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பு நிதி உதவியுடன், மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது.வில்லங்க பட்டியல்இதில், முதல்கட்டமாக இரண்டு வழித்தடங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இரண்டாம் கட்ட மாக, மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லுார், சி.எம்.பி.டி., - கலங்கரை விளக்கம் ஆகிய வழித்தடங்களில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த அறிக்கை, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்டத்துக்காக உத்தேசிக்கப்பட்ட வழித்தடங்களில், நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை, மெட்ரோ ரயில் நிறுவனம் படிப்படியாக வெளியிட்டு வருகிறது.இதன்படி, பதிவுத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவைப்படும் நிலங்களின் சர்வே எண்கள், வில்லங்க பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.இதில், எந்தெந்த சர்வே எண்ணில், எவ்வளவு நிலம் எடுக்கப்படும் என்பதை, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், தெளிவாக அளிக்கவில்லை.இதனால், சிறு பகுதி நிலம் கையகப்படுத்த உள்ள இடங்களில், சர்வே எண் மட்டும், வில்லங்க சான்றிதழில் சேர்க்கப்பட்டதால், மீதியுள்ள நிலங்கள், அதில் கட்டப்பட்ட வீடுகளை விற்க முடியாமல், உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.உதாரணமாக, சென்னை, ராயப்பேட்டை, வெஸ்ட்காட் சாலையில், 'ராம்ஸ் கேசரி குடீராம்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் முன் பகுதியில், 6.6 அடி அகலத்துக்கு, நிலம் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.ஆனால், இந்த நிலத்தின் சர்வே எண்ணை மட்டும், வில்லங்க சான்றிதழில் சேர்த்ததால், இதில், மீதியுள்ள குடியிருப்பில், வீடுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புகார்இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தை, உரிமையாளர்கள் நேரடியாக அணுகினர், அங்குள்ள அதிகாரிகள், முறையான பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தாலும், அதிகாரிகள் பதில் அளிக்க மறுக்கின்றனர். பதிவுத்துறையில், நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்துஉள்ளனர்.இந்நிலையில், அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கை வந்தால், ஒவ்வொரு சர்வே எண்ணிலும், எவ்வளவு நிலம் எடுக்கப்படும் என்பதை, சம்பந்தப்பட்ட துறையினரிடம் இருந்து பெற்று, வில்லங்க சான்றிதழில் சேர்க்க, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, நில உரிமையாளர்கள் கூறியதாவது:ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, நிலம் எடுப்பது தொடர்பான அறிவிக்கையில், கூடுதல் விபரம் கேட்டு, பதிவுத்துறை அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன நில எடுப்பு பிரிவுக்கு கடிதம் அனுப்பினர்.இந்த கடிதம் அனுப்பி மூன்று வாரங்களாகியும், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், எவ்வித பதிலும் அளிக்காமல் உள்ளனர்.இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரத்தில் விசாரித்த போது, நிலம் கையகப்படுத்தும் பிரிவு, இதற்கு விளக்கம் கேட்டு, தொழில்நுட்ப பிரிவுக்கு கடிதத்தை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.நியாயம் வேண்டும்ஆனால், ராயப்பேட்டை உட்பட பல இடங்களில், ரயில் நிலையங்களின் வடிவமைப்பு, இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதால், இதற்கு பதில் அளிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.வடிவமைப்பு இறுதி செய்யப்படாத நிலையில், அரைகுறை தகவல்களுடன் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு, மெட்ரோ ரயில் நிறுவனம் மக்களை வஞ்சிக்கிறது.இரண்டாம் கட்டத்தில், அமைய உள்ள, 116 ரயில் நிலயங்களுக்கும் நிலம் வழங்க, தயாராக இருக்கும் உரிமையாளர்களை வஞ்சிக்கும் வகையில், மெட்ரோ அதிகாரிகள் செயல்படுகின்றனர்.தமிழக அரசு தலையிட்டு, நில உரிமையாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X