நட்சத்திர ஓட்டலை அகற்ற காத்திருக்கும் பொ.ப., துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:48

கோயம்பேட்டில், கூவத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, நட்சத்திர ஓட்டலை அகற்ற வழி பிறக்குமா? என, பொதுப்பணித்துறை காத்திருக்கிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கும் கூவம் ஆறு, திருவேற்காடு, அமைந்தகரை, சிந்தாதிரிபேட்டை வழியாக பயணித்து, நேப்பியர் பாலம் அருகேவங்க கடலில் கலக்கிறது.சென்னை நகரில்,கழிவுநீர் வெளியேற்றுவதற்கு, இந்த ஆறு பயன்படுத்தப்படுகிறது. கூவம் ஆற்றை புனரமைக்க அரசுமுடிவெடுத்துள்ளது.இதற்காக, சென்னை மாநகராட்சி, பொதுப்பணி உள்ளிட்ட துறைகள் இணைந்து, பணிகளை மேற்கொள்கின்றன.இதற்காக சென்னை நகரில் பல பகுதிகளில், கூவத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்கப்பட்டுஉள்ளது.கோயம்பேட்டில், கூவத்தை ஆக்கிரமித்து, நட்சத்திர ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை அகற்ற, பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஜனவரியில் நடவடிக்கை எடுத்தனர்.ஆக்கிரமிப்பு பகுதிகளை காலி செய்வதற்கு, ஓட்டல் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது.இது தொடர்பான வழக்கு, தொடர்ந்து நடந்து வருகிறது.தற்போது, வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 11ல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், கூவம் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, பொதுப்பணித் துறையினர் விரும்புகின்றனர்.இதற்காக, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து, பொதுப்பணித் துறையினர் காத்திருக்கின்றனர்


- நமது நிருபர் -.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
07-டிச-201810:31:07 IST Report Abuse
JeevaKiran ஆக்ரமிப்பு என்று தெரிந்தும் எப்படி கோர்ட் தடையாணை பிறப்பிக்கிறது. ஒன்றுமே புரியலை உலகத்திலே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X