| 'எச்.ஐ.வி., நோயாளிகளை ஒதுக்காதீர்' Dinamalar
'எச்.ஐ.வி., நோயாளிகளை ஒதுக்காதீர்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:49

ராயபுரம்: எச்.ஐ.வி., நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி, ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம், ஒவ்வொரு ஆண்டும், டிச., 1ம் தேதி, உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில், நேற்று முன்தினம், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.இதை, ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி முதல்வர், பொன்னம்பல நமசிவாயம் துவக்கி வைத்தார்.இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவ - மாணவியர், திருநங்கையர் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு எச்.ஐ.வி., நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்களின் நாடகம் மற்றும்திருநங்கையரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.நிருபர்களிடம், முதல்வர் பொன்னம்பல நமசிவாயம் பேசியதாவது:ஸ்டான்லியில், 2,500 எச்.ஐ.வி., நோயாளிகள், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.எச்.ஐ.வி., நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.எச்.ஐ.வி., நோயாளிகளை தொடுவதால், அந்நோய் பரவாது. பாதுகாப்பற்ற உடல் உறவு மற்றும் எச்.ஐ.வி., நோயாளிகளின் ரத்தத்தை மற்றொருவருக்கு பயன்படுத்தினால் மட்டுமே, நோய் பரவும். எனவே, எச்.ஐ.வி., நோயாளிகளை ஒதுக்காதீர்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X