| உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் Dinamalar
உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:50

சென்னை: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமிதியின் சார்பில், உலக நன்மைக்காக, பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட உள்ளன.இதுகுறித்து, அந்த அமைப்பினர் கூறியதாவது:சென்னை, மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வரும், ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமிதி, ஆரியகவுடா தெருவில் உள்ள, அயோத்தியா மண்டபத்தில், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.உலக மக்களுக்கு, அனைத்து வித நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நாளை காலை, 7:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, பலவித சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.நாளை மறுநாள், காலை, 9:00 மணி முதல், சாஸ்தா பிரீதி பூஜையும், மாலை, 7:00 மணிக்கு, கோவை ஜெயராமனின் நாம சங்கீர்த்தனமும் நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு, 98410 71793 என்ற, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X