| மா சாகுபடியில் நிலையான வருமானம்: கைகொடுக்கும் சொட்டுநீர் பாசனம் Dinamalar
மா சாகுபடியில் நிலையான வருமானம்: கைகொடுக்கும் சொட்டுநீர் பாசனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
23:47

கிணத்துக்கடவு:பயிர் சாகுபடி மேற்கொள்ள இயலாத வறட்சி மிகுந்த மானாவாரி நிலத்தில், மா சாகுபடி கைகொடுப்பதால் விவசாயிகள் அதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.கிணத்துக்கடவு அடுத்த மன்றாம்பாளையம், நடுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகுடபதி. இவருக்கு சொந்தமான நிலத்தில், 6.5 ஏக்கர் நிலம் சாகுபடி செய்யாமல், பல ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி இருந்தது.


இந்நிலத்தின் வழியே, பி.ஏ.பி.,கிளைக் கால்வாய் சென்றும், பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. மானாவாரி நிலத்தை சீர்செய்து, சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மாற்றியுள்ளார்.அங்கு, 2.5 ஏக்கரில் தேக்கு மர சாகுபடியும், நான்கு ஏக்கரில், சொட்டு நீர் பாசனத்தில் மா நாற்றும் நடவு செய்யப்பட்டது.விவசாயி மகுடபதி கூறியதாவது:ஆட்கள் பற்றாக்குறை, விவசாயிகளை சோர்வடைய செய்துள்ளது. இந்நிலையில், நிலத்தில் மா நாற்றுகள் நடவு மேற்கொள்ள முடிவு செய்தேன்.திருப்பத்துாரில் இருந்து, பங்கனப்பள்ளி, அல்போன்சா மற்றும் இமான்பஸ்தா ரக மா நாற்றுகள், 300யை கொள்முதல் செய்தேன்.நிலத்தில், 24 அடி இடைவெளியில் ஒரு நாற்று வீதம், நடவு செய்யப்பட்டன. அதற்காக, மூன்றடி ஆழம் குழி தோண்டி, அதில், ஒன்றரை அடி ஆழத்துக்கு தொழு உரமிட்டு, மா நாற்று நடவு செய்யப்பட்டது.நான்கு நாட்களுக்கு ஒருமுறை, சொட்டு நீர் பாசனம் கொடுக்கப்படுகிறது.


இரண்டு ஆண்டுகள் இம்முறையை பின்பற்றினால் போதும், அதன்பின் தண்ணீர் தேவையில்லை. மழையை பயன்படுத்தி மா மரம் வளர்ந்து விடும்.மூன்று மாதத்தில் மா நாற்றில் பூவெடுக்க துவங்கியது. ஆனாலும், மரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பூக்கள் கிள்ளி எடுக்கப்படும்.மூன்றாவது ஆண்டில், மாந்தோப்பாக மாறி, காய்ப்பை துவங்கும். மா சாகுபடியில், குறைந்த பராமரிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நிலையான வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X