| குப்பை கொட்ட இடமில்லை: புலம்பல் ஊராட்சி நிர்வாகம் Dinamalar
குப்பை கொட்ட இடமில்லை: புலம்பல் ஊராட்சி நிர்வாகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
23:56

மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சியில், மூன்று கிராமங்கள் உள்ளன. இதிலுள்ள, 30 க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கும் குப்பைகள் சீராக அப்புறப்படுத்துவது இல்லை. இதனால், சுகாதாரகேடு ஏற்படுகிறது என புகார் தெரிவித்த மக்கள், நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்தனர். ஊராட்சி செயலாளர் முகமது இசாக் (பொ) கூறுகையில், '' கணியூர் வடக்கு பகுதியிலுள்ள காலி இடத்தில், ஊராட்சி குப்பை கொட்டும் இடமாக பயன்பட்டது. இந்த இடத்தில் போலீஸ் ஸ்டேசன் கட்டடம் கட்டிய பிறகு, தெருக்களில் அள்ளும் குப்பைகளை கொட்ட இடம் கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்துக்கு, கோரிக்கை விடுத்து உள்ளோம். இடமில்லாததால், தெருக்களில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அள்ளி, அப்புறப்படுத்த இயலவில்லை,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X