ஏறுமுகத்தில் தக்காளி கொள்முதல் விலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:05

உடுமலை:உடுமலையில், பருவமழையின் தாக்கத்தால், வரத்து குறைந்து, தக்காளி விலை உயரத்துவங்கியுள்ளது.உடுமலையில், ஆண்டியகவுண்டனுார், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, மருள்பட்டி, மலையாண்டிக்கவுண்டனுார், குறிஞ்சேரி, புக்குளம், பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.


ஆண்டு முழுவதும் பயிரிடப்பட கூடிய பயிராகவும் தக்காளி உள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். அதிகபட்சமாக தக்காளி பெட்டி, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், உடுமலையில் சுற்றுப் பகுதிகளில் பெய்த மழையால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைவால், விலையும் சற்று உயர்ந்து வருகிறது.ஒருவாரமாக, 13 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. தினசரி சந்தையில் நேற்று அதிகபட்சமாக, 170 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.


உழவர் சந்தையிலும் கிலோ, 20 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்துள்ள நிலையில் தக்காளி தரமில்லாமல் மழையினால் பாதிக்கப்பட்டு அழுகி, நோய் தாக்கியும் காணப்படுகிறது.உழவர் மற்றும் தினசரி சந்தைகளில் சில்லரையில் விற்பனை செய்யப்படும் தக்காளி தரமற்றதாக இருப்பதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.கடந்த சீசனில் நடவு செய்யப்பட்ட செடிகளில் காய்ப்பு முடிந்துள்ளதால், பழங்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இனிமேல், புதிய தக்காளி வந்தால் மட்டுமே விலை சீராக வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X