| அரசு பஸ்சை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை Dinamalar
அரசு பஸ்சை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:26

சிறுபாக்கம்:நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என 20 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடியிலிருந்து ஈ.கீரனுார், மங்களூர், மாங்குளம், விழுப்புரம் மாவட்டம் ஈரியூர், வானவரெட்டி வழியாக கள்ளக்குறிச்சிக்கு தடம் எண்.356 அரசு பஸ் இயங்கி வந்தது. இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள் பயனடைந்தனர்.தற்போது, அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், இரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் திட்டக்குடி பகுதிகளுக்கு வி.கூட்டுரோடு, சின்னசேலம், வேப்பூர் வழியாக 30 கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.இதனால் காலவிரயம், கூடுதல் செலவினம் ஏற்படுவதால் அவதியடைகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க 20 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X