| மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி Dinamalar
மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:28

நெய்வேலி:நெய்வேலியில் கடலூர் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடந்தது.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள லிக்னைட் சிட்டி கிளப் சார்பில் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டது. கடலுார், நெய்வேலி, பண்ருட்டி, வடலுார், விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து 384 பேர் மற்றும் 402 சிறுவர் சிறுமியர் இப்போட்டிகளில் பங்கேற்றனர். 39 வகைகளில் மொத்தம் 363 மேட்சுகள் நடத்தப்பட்டது.வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த நடுவர் பாலசுந்தரம் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் இப்போட்டிகளில் நடுவர்களாக செயல்பட்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு லிக்னைட் சிட்டி கிளப் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. என்.எல்.சி.,செயல் இயக்குநர் ேஹமந்த்குமார் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட பூப்பந்து நலச்சங்கத் தலைவர் முத்துக்குமரன், செயலர் ராஜேஷ்பாபு முன்னிலை வகித்தனர். லிக்னைட் சிட்டி கிளப் செயலர் சொக்கலிங்கம் வரவேற்றார்.கடலூர் மாவட்ட முதன்மை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் ரவி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X