| மாணவர்களுக்கு அறிவுத்திறன் மேம்படும் Dinamalar
மாணவர்களுக்கு அறிவுத்திறன் மேம்படும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:34

கோத்தகிரி:'பள்ளி மாணவர்கள் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், அறிவுத்திறன் மேம்படும்,' என, பள்ளியில் நடந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது.கோத்தகிரி குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளியில், விளையாட்டு உடை வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார்.


கோத்தகிரி தாசில்தார் ரவிக்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''பள்ளி மாணவர்கள், பாடநுால், நுாலக படிப்பு, பாட இணை செயல்பாடுகளுடன், நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கும் பயிற்சியை பெற்றால், அறிவுத்திறன் மேம்படும். அத்துடன், விளையாட்டு மற்றும் தனித்திறன் பெற்று, சமுதாயத்தில் சாதிக்க, தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பள்ளி, பல வகையில் மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவது பாராட்டுக்குரியது,'' என்றார்.கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் அரவிந்தன், முன்னிலை வகித்து பேசுகையில்,''தாய் மொழி கல்வியோடு, இன்றைய கால கட்டத்தில், ஆங்கில கல்வியும் முக்கியமாக உள்ளது.


மாணவர்கள் தமிழ் பாடத்துடன், ஆங்கிலத்திலும் புலமை பெறவேண்டும். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கவேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, விளையாட்டு உடை மற்றும் கல்வி உதவி சார்ந்து, 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய, புடியங்கி கிராமத்தை சேர்ந்த குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வி.ஏ.ஓ.,லெனின், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திராணி, பி.டி.ஏ., தலைவர் பீட்டர் சந்திரன் மற்றும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிவராஜ் உட்பட, பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். பி.டி.ஏ., நிர்வாகி சிவக்குமார் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X