| முதல்வர் வீடு முன்பு முற்றுகை Dinamalar
முதல்வர் வீடு முன்பு முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:36

த.வா.க., நிறுவனர் வேல்முருகன் எச்சரிக்கை
பண்ருட்டி:மணல் குவாரியை மூடவில்லையென்றால் முதல்வர் வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என வேல்முருகன் பேசினார்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலத்தில் பெண்ணையாற்றில் உள்ள மணல் குவாரியை மூட வலியுறுத்தி த.வா.க., தலைமையில் அனைத்து கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, த.வா.க., மாவட்ட தலைவர் சுரேந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராமு, ம.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் வெங்கடேசன், ஜெய்சங்கர், ஐ.என்.எல்., மாவட்ட தலைவர் சவுகத்அலி, இ.கம்யூ., சிவக்குமார், ஞானசேகரன், வி.சி., வெங்கடசாமி, தே.மு.தி.க., ஒன்றிய செயலர் முத்துகுமரன் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் த.வா.க., தலைவர் வேல்முருகன் பேசுகையில், 'எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இப்பகுதி விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. பொதுமக்கள், பெண்கள் போராடினால் போலீசார் அடக்குமுறையை கையாள்கின்றனர்.அரசு உடனடியாக மணல் குவாரியை மூட வேண்டும். இல்லையெனில் கலெக்டர் அலுவலகம், அவரது வீடு முன்பு சமையல் செய்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லையெனில் தலைமைச் செயலகம், முதல்வர் பழனிசாமி வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அதற்கும் செவிசாய்க்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் சிறந்த நீதிபதியின் பார்வைக்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்படும்' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X