| கார்டைட் தொழிற்சாலையில் கோரிக்கை முழக்க பேரணி Dinamalar
கார்டைட் தொழிற்சாலையில் கோரிக்கை முழக்க பேரணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:39

குன்னூர்:குன்னுார் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில், கோரிக்கை முழக்க பேரணி நடந்தது.குன்னுார் அருகே உள்ள அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையின் சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி., டி.எப்.எல்.யு., ஆகியவற்றின் போராட்டக்குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.


தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வந்த பேரணி, ஊட்டி - குன்னுார் சாலை தொழிற்சாலை கேட் அருகே நிறைவு பெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.அதில், 'தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது; மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டிப்பது, நாடுமுழுவதும் ஜனவரி, 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது,' என்பன, உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபபட்டன.போராட்டக்குழு நிர்வாகிகள் அசோகன், பிலிப் லிஸ்ரோ (சி.எப்.எல்.யு.,) திலீப்குமார், ஜோஷிலாசர் (ஐ.என்.டி.யு.சி.,) வெங்கேசஷ்ராவ், சாந்தகுமார் (டி.எப்.எல்.யு.,) ஆகியோர் முன்னிலையில் நுாற்றுக்கணக்கான தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X