| இ-சேவை மைய கட்டடம் பழுது மழைநீர் ஒழுகுவதால் அவதி Dinamalar
இ-சேவை மைய கட்டடம் பழுது மழைநீர் ஒழுகுவதால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:43

விருத்தாசலம்:விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பழுதான கட்டடத்தில் உள்ள இ-சேவை மையத்தில் மழைநீர் ஒழுகுவதால், மின்சாதன பொருட்கள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தில், பொது இசேவை மையம் செயல்படுகிறது. இங்கு, ஜாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி, முதல் திருமணம் உள்ளிட்ட சான்றுகள் வழங்கப்படுகிறது.இதற்காக விண்ணப்பததாரரின் ஒரிஜினல் சான்றுகளை ஸ்கேன் செய்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். அதனை அந்தந்த வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர்கள் சரிபார்த்து, ஒப்புதல் வழங்கியதும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக, இ-சேவை மையத்தில் சான்றுகளை பதிவேற்றம் செய்ய கம்ப்யூட்டர்கள், சான்றுகளை ஸ்கேன் செய்யும் இயந்திரம், பிரிண்டர், இன்டர்நெட் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், கட்டடம் பழுதடைந்து, ஆங்காங்கே சுவர்கள் விரிசல் விழுந்தும், மேற்கூரை சேதமடைந்து இருப்பதால் மழைநீர் ஒழுகும் அவலம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு மன் பழுதான மின் ஒயர்களால், சுவர்களில் மின்சாரம் கசிந்து, பன்றி ஒன்று இறந்தது குறிப்பிடத்தக்கது.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பழுதான மின்ஒயர்களை சீரமைக்கும் பணி நடந்தது.ஆனால், கட்டடம் சீரமைக்காததால், மழை பெய்தால் மழைநீர் ஒழுகுவதால் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.இதனால் பொது மக்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய சாதனங்கள் வீணாவதால், இசேவை மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X