| போலீஸ் எஸ்.ஐ., மீது தாக்குதல், அண்ணா சாலையில் பரபரப்பு Dinamalar
போலீஸ் எஸ்.ஐ., மீது தாக்குதல், அண்ணா சாலையில் பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:47

திருவல்லிக்கேணி: உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்விடுத்து, அவரை தாக்கிய, பிரபல ஓட்டல் ஊழியர்கள், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில், ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், பகல் நேரங்களை விட, இரவு நேரங்களிலேயே அதிக வியாபாரம் ஆகின்றன. இதனால், சில ஓட்டல்கள் விடிய விடிய திறந்து வைக்கப்படுகின்றன.அண்ணா சாலையில் உள்ள தர்கா எதிரே, ஆறு அசைவ உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.இதன் உரிமையாளர்களுக்கு, நள்ளிரவு, 12:30 மணி வரை மட்டுமே ஓட்டல் நடத்த வேண்டும் என, திருவல்லிக்கேணி துணை கமிஷனர், செல்வநாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு மேல், ஓட்டல்கள் திறந்திருந்தன. இதை அறிந்த உதவி ஆய்வாளர், ராமமூர்த்தி, ஊழியர்களை அழைத்து, ஓட்டலை மூட உத்தரவிட்டார்.இதில், ஆத்திரமடைந்த மூன்று ஓட்டல்களைச் சேர்ந்த, ஆறு ஊழியர்கள், உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி, 53, ராசுகுட்டி, 26, உள்ளிட்ட ஆறு பேரை, நேற்று காலை கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X