| கைபந்து, கபடி போட்டி பரிசளிப்பு விழா Dinamalar
கைபந்து, கபடி போட்டி பரிசளிப்பு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:49

பண்ருட்டி;பண்ருட்டி வட்டார அளவில் நேருயுவகேந்திரா சார்பில் விளையாட்டு போட்டி திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றியங்களுக்குட்பட்ட இளைஞர் மன்றங்களுக்கு இடையே கைபந்து மற்றும் கபடி போட்டி நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.இதில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலகின் மேற்பார்வையாளர் கதிரவன், பண்ருட்டி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, தேசிய தொண்டர் கவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சேரன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X