போலீஸ் டைரி...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:52

சிறுமியை கர்ப்பமாக்கியவன் கைதுபெருங்குடியைச் சேர்ந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம், மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரது பெற்றோர் புகாரின்படி, துரைப்பாக்கம் போலீசார் விசாரித்ததில், சிறுமியின் தாய்மாமனான கிருபானந்தன், 23, காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியரை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், கிருபானந்தனை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.பெண்ணிடம் 5 சவரன் பறிப்புபல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்தவர், ஜலஜா, 46. நேற்று முன்தினம் மதியம், அப்பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஜலஜாவின், 5 சவரன் செயினை பறித்துச் சென்றனர். சங்கர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.மொபைல், மடிக்கணினி திருட்டுபூந்தமல்லி, ஜட்ஜ் செல்லப்பா தெருவில், தனியாருக்கு சொந்தமான விடுதி உள்ளது. அங்கு, பரத ரத்தினம், 23, உட்பட, நால்வர் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கதவை திறந்து வைத்து துாங்கிய நிலையில், நள்ளிரவில் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள், 4 மொபைல் போன்கள், மடிக்கணினி, பள்ளி, கல்லுாரி சான்றிதழ் ஆகியவற்றை திருடிச் சென்றனர். பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.லாட்டரி விற்பனை செய்தவன் கைதுசூளைமேடு, சவுராஷ்டிரா நகர், 9வது தெருவில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, லாட்டரி விற்பனை செய்த, குன்றத்துாரைச் சேர்ந்த சுப்ரமணியன், 45, என்பவனை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.தகராறு செய்தவன் கைதுதிருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, கோவில் அறநிலையத்துறை ஊழியர் குமரேசன், 54, பணியில் இருந்தார். அப்போது, கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்த ஜானகிராமன், 46, என்பவன், பக்தர்களுக்கு கோவிலை சுற்றி காண்பித்து, பணம் வசூலித்துள்ளான். இதை கண்டித்த குமரேசனை, தகாத வார்த்தை திட்டிய ஜானகிராமன், தகராறில் ஈடுபட்டான். திருவொற்றியூர் போலீசார், ஜானகிராமனை கைது செய்தனர்.பெண்ணிடம் 3 சவரன் பறிப்புதிருவேற்காட்டைச் சேர்ந்தவர், கயல்விழி, 34. நேற்று மதியம், 3:30 மணிக்கு, அயனம்பாக்கம், தனியார் பள்ளியில் படிக்கும் மகனுடன், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கயல்விழியின், 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபரை தாக்கி மொபைல் பறிப்புஅபிராமபுரத்தைச் சேர்ந்தவர், கார்த்திக், 28. நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீட்டருகே வந்த போது, வழி மறித்த மர்ம நபர்கள், கார்த்திக்கை தாக்கி, மொபைல் போனை பறித்துச் சென்றனர். அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X