| காட்டின் மொழி! Dinamalar
காட்டின் மொழி!
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:58

மனதை நிசப்த நிலைக்கு கொண்டு செல்லும், புல்லாங்குழல் இசையை அனுபவிக்காதவர்கள் உடனே கஸ்துாரி சீனிவாசன் கலையரங்குக்கு, விசிட் அடிக்கலாம்.'ஆதி சித்ரா' எனும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் கண்காட்சியில், பழங்குடி மக்களின், பாரம்பரிய கலைப்பொருட்கள் புல்லாங்குழல் பின்னணியில் இசைக்க, ஆயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளன. சட்டீஸ்கரிலிருந்து மூங்கில் காற்று குழல், மெழுகு வார்த்து பித்தளையில் தயாரான ஆதிவாசி சிலைகள், மத்திய பிரதேசத்தின், 'கோண்டு' ஓவியங்கள், ஒடிசாவின் சில்க் துணி ஓவியங்கள், மகாராஷ்டிராவின் 'வார்னே' ஓவியங்கள், குஜராத் 'பித்தோரா' பெயின்டிங்...சான்சே இல்லை! கஸ்துாரி சீனிவாசன் அரங்கம், அவிநாசி ரோடு. 88383 53575, 99440 82031.பழங்குடியின மக்களின், ஆழமான நுட்பக்கலைகளை இதில் உணரலாம். தவிர, நகைககள், அலங்கார உலோகப் பொருட்களும் இங்கே உண்டு. குறைந்தது, 100 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. வரும் 16ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை ரசிக்கலாம்.- ராமநாதன், மண்டல மேலாளர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X