| ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் Dinamalar
ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
01:00

பெண்ணாடம்:பெண்ணாடத்தில் ரேஷன் பொருட்களை முறையாக வழங்கக்கோரி, அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெண்ணாடம், கிழக்குரத வீதியில் உள்ள ரேஷன் கடை மூலம் 1000 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இங்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கடையில் ஒவ்வொரு மாதமும், கார்டுக்கு நிர்ணயித்த அளவிற்கு பொருட்களை வழங்குவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12:30 மணியளவில் ரேஷன் பொருட்களின் எடை குறைவு மற்றும் 6 மாதங்களாக கோதுமை வழங்காததைக் கண்டித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டனர்.மேலும், விற்பனையாளர் பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைவாக அனுப்பப்படுகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து, பொருட்கள் முழுமையாக வழங்குவதாக பாண்டியன் தெரிவித்தார். அதையேற்று 1:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X