ரேஷன் பொருட்கள் மக்களை சென்றடைகிறதா? உணவு பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
01:08

கோவை:கோவையில் தமிழக உணவு பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், கூட்டுறவு, வருவாய், வழங்கல் துறை அதிகாரிகளுடன் நேற்று கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.இதில், தமிழக உணவு பாதுகாப்பு ஆணையத்தலைவர் வாசுகி பேசியதாவது:ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரருக்கும், தலா 20 கிலோ எடை அரிசி வழங்க வேண்டும். நான்கு பேருக்கு அதிகமாக குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு, தலா ஒருவருக்கு 5 கிலோ எடை அரிசி கூடுதலாக வழங்க வேண்டும்.


மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டப்படி, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் உணவு இன்றி தவிக்கக்கூடாது. ரேஷன் பொருட்களை, ரேஷன் கடைக்கு கொண்டு போய் சேர்ப்பதோடு, அவை மக்களுக்கு போய் சேருகிறதா என்பதையும், அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.அந்தியோதயா அன்னபூர்ணா, முதியோர் உதவித்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அரிசி, சரியான நபர்களை சென்றடைகிறதா என்பதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.


ரேஷன் கடைகளில் பயன்படுத்தும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் பழுதானால், அவற்றை மாற்ற தாலுகாதோறும், ஆறு கருவிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, வாசுகி பேசினார். இதையடுத்து அவர் கோவை, ராமநாதபுரத்திலுள்ள இரண்டு ரேஷன்கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அதே பகுதியிலுள்ள இரண்டு வீடுகளில், ரேஷன் பொருள் வினியோகம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X