| அம்பேத்கர் நினைவு நாள் அரசியல் கட்சியினர் அஞ்சலி Dinamalar
அம்பேத்கர் நினைவு நாள் அரசியல் கட்சியினர் அஞ்சலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
01:13

கடலுார்:கடலுாரில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.கடலுார் பாரதிரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி., கட்சி கடலுார் லோக்சபா தொகுதி செயலர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் தலைமையில் மாலை அணிவி்த்தனர். நகர செயலர்கள் செந்தில், சேதுராமன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, நகர செயலர் ராஜா மாலை அணிவித்தனர். காங்., சார்பில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலர் ரவிக்குமார் பங்கேற்றனர். மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மாதவன், சுப்ராயன் மாலை அணிவித்தனர்.பா.ஜ., சார்பில் நகர செயலர் பாபுராஜ் தலைமையில் பெருளாளர் பெருமாள், மாவட்ட பொதுச் செயலர் சொந்தாமரைக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழ்நாடு அரசு எஸ்.சி., - எஸ்.டி., அலுவலர் சங்க பரமேஸ்வரன், நிர்வாகிகள்; இந்திய குடியரசு கட்சி தலைவர் வீரவேல், செயலர் ஜெயமணி, உத்தரவேல்; பகுஜன் ஜமாஜ் கட்சி மநில இளைஞர் அணி செயலர் சுரேஷ், தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X