| வரி பாக்கி செலுத்த கமிஷனர் வேண்டுகோள் Dinamalar
வரி பாக்கி செலுத்த கமிஷனர் வேண்டுகோள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
01:24

கடலுார்:நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி செலுத்தி ஜப்தி நடவடிக்கையினை தவிர்க்குமாறு கடலுார் நகராட்சி கமிஷனர் பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கடலுார் பெருநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் உள்ள வரிவிதிப்புதாரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் கட்டணம், கடை வாடகை, தொழில்வரி, தொழில் உரிமம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகிய தொகைகளை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி மையம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், கடலுார் துறைமுகம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு கணினி வசூல் மையங்களில் நிலுவையின்றி செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடையை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X