'நெஞ்சில் ஈரம் இன்னும் காயவில்லை!' நிவாரணம் அனுப்பும் பணியும் ஓயவில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
01:50

திருப்பூர்:கஜா புயல் மழையால் பாதிக்கப்பட்ட, டெல்டா மாவட்ட மக்களுக்கு, திருப்பூரிலிருந்து நிவாரண பொருள் அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.திருப்பூரில் இயங்கி வரும், 'முயற்சி' மக்கள் அமைப்பு சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள் சேகரிக்கப்பட்டன.



அவற்றை, கலெக்டர் பழனிசாமி, தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன், முயற்சி அமைப்பினர், புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.l வீரபாண்டி, மணல் தோட்டம், எம்.ஜி.எஸ்., முத்து நகர் பகுதியை சேர்ந்த மக்கள், புயல் பாதித்த மக்களுக்கு உதவிட, வீடு வீடாக பொருட்களை சேகரித்து, மாவட்ட நிர்வாகத்தின் முகாமில் ஒப்படைத்தனர். அரிசி, பருப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள், புயல் பாதித்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.l வீரபாண்டி இந்திய கம்யூ., சார்பில், 2 டன் அரிசி, 750 பெட்ஷீட், வேட்டி- சேலை 200 செட், சிறுவர் ஆடைகள் 500, பிளாஸ்டிக் குடம், 200 ஆகிய நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. முன்னதாக, இவற்றை வீரபாண்டியை சேர்ந்த ஆறுமுகம், வடிவேல் குழுவினர், நிவாரண பொருட்களை சேகரித்து, கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர், ராயபுரம் முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமி மற்றும் எம்.கே.எம்., ஓட்டல்குழுமம் சார்பில், அரிசி, ரவை, பருப்பு, சர்க்கரை, பெட்ஷீட், பனியன் ஆடைகள் என, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி, துணை செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள், பொருட்களை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.l திருப்பூர் எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ் குரூப் ஆப் கம்பெனி நிர்வாகம், அலுவலர்கள் மற்றும் 1,200 பணியாளர்கள், தங்களது ஒருநாள் சம்பளத்தை, கஜா புயல் நிவாரணமாக வழங்கினர். மேலும், வீட்டு உபயோக பொருட்கள், 3.31 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.


திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதி ஒர்க் ஷாப் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் 270 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. தலா 5 கிலோ அரிசி, பிஸ்கெட், பேஸ்ட், -பிரஷ், போர்வை உட்பட பொருட்கள் வேதாரண்யம் மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.


திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய வடக்கு மற்றும் தெற்கு அலுவலகம் சார்பில், சாய ஆலைகள், பொது, தனியார் சுத்திகரிப்பு மையங்களில் கஜா புயல் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. மொத்தம், 95 டன் அரிசி; 500 பெட்ஷீட்; 500 தார்பாய்; 2 ஆயிரம் வேட்டி, 5 பாக்ஸ் மெழுகுவர்த்தி ஆகிய நிவாரண பொருட்கள், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.


திருப்பூர் மாவட்ட மா.கம்யூ., மற்றும் சி.ஐ.டி.யு., அமைப்பு சார்பில், அரிசி, பருப்பு, எண்ணெய், பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான, பொருட்கள் ஒரு லாரி மூலம், அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமையில், தொழிற்சங்க நிர்வாகிகள் ரங்கராஜ், ஜெயபாலன், மூர்த்தி, ராஜகோபாலன், பாலன் உள்ளிட்டோர் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். பொருட்கள், திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்சி நிர்வாகிகள் மூலம் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று வினியோகிக்கப்படும், என நிர்வாகிகள் தெரிவித்தனர்.l அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள கிங்டம் பள்ளியில், பெற்றோர் மற்றும் மாணவர் சார்பில் கஜா புயல் நிவாரணம் சேகரிக்கப்பட்டது. அரிசி, பருப்பு, கோதுமை, உப்பு, எண்ணெய், போர்வை என, ரூ. 4 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, பள்ளி வேன் மூலம், நாகையில், புயலால் பாதிக்கப்பட்ட, 350 குடும்பங்களுக்கு, பள்ளி மேலாளர் உமாசங்கர், அலுவலர்கள் நேரடியாக சென்று, வழங்கினர்.


அவிநாசியில் இயங்கி வரும், தமிழர் பண்பாட்டு கலாச்சார பேரவை சார்பில், அதன் தலைவர் நடராஜ், துணைத் தலைவர் அப்புசாமி, செயலாளர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள், கஜா புயல் நிவாரணத்துக்காக, 2 டன் எடையுள்ள அரிசியை, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.l அவிநாசி, ஆட்டையாம்பாளையத்தில் உள்ள, கொங்கு கல்வி நிலையம் சார்பில், கஜா புயல் நிவாரணத்துக்கு, 150 சிப்பம் அரிசி வழங்கப்பட்டது. இதனை, தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் முன்னிலையில், பள்ளி தாளாளர் பழனிசாமி வழங்கினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X