திருப்பூர்:கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையரின் எல்லைக்கு உட்பட்ட திருப்பூர், குன்னுார், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகங்கள் உள்ளன. இங்கு, காலியாக உள்ள, ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களை இன சுழற்சி விதிகளின் அடிப்படையில் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது.பொதுப்பிரிவினர், 30 வயது; பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள், 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள், ஆதரவற்ற விதவை ஆகியோர், 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டடம், ஆறாவது தளம், டி.எம்.எஸ்., வளாகம், சென்னை' என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.