| திருவள்ளுவர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி Dinamalar
திருவள்ளுவர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:21

புதுச்சேரி:திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பவள விழாவை முன்னிட்டு, சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.'மாணவிகளுக்கான உடல் நலம், தீர்வுகள்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளுவர் பள்ளியின் முன்னாள் மாணவிகளான, இந்திராகாந்தி மருத்துவமனை டாக்டர் கலைவாணி, மதர்தெரேசா சுகாதார அறிவியல் கல்வி நிறுவனத்தின் முதன்மை செவிலிய அதிகாரி பிரமிளா தமிழ்வாணன் ஆகியோர் உரையாற்றினர். மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியில் வழக்கறிஞர் திலகவதி, ஜிப்மர் மருத்துவமனை தொழில்நுட்ப அதிகாரி சுஜாதா ரஜீஷ் உள்ளிட்ட முன்னாள் மாணவிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் செல்வசுந்தரி, விரிவுரையாளர் சிவராம ரெட்டி, பக்கிரிசாமி, குப்புசாமி செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X