| சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: பா.ஜ., கொண்டாட்டம் Dinamalar
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: பா.ஜ., கொண்டாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:22

புதுச்சேரி:பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செல்லும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை, புதுச்சேரி பா.ஜ., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.புதுச்சேரிக்கு சட்டசபைக்கு, பா.ஜ., வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரை, நியமன எம்.எல்.ஏ.,க்களாக, கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி, மத்திய உள்துறை நியமித்தது. ஆனால், சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்களை அங்கீகரிக்காததால், இது தெடார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செல்லும் என, சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகள், இந்திரா சிக்னல் அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நியமன எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன் செல்வகணபதி, சங்கர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட தொண்டர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X