வாகனங்களுக்கு வரி உயர்வு: போக்குவரத்து துறை அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:31

புதுச்சேரி:போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு, இன்று (7ம் தேதி) முதல் வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத சில வகையான வாகனங்களுக்கு வரி விகிதத்தை இன்று (7ம் தேதி) முதல் உயர்த்தி உள்ளது. இதன்படி சுமையுடன் கூடிய மூன்றாயிரம் கிலோ எடைக்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு தற்போது உள்ள ஆண்டு வரி ரூ. 2 ஆயிரம் நீக்கப்பட்டு, அந்த வாகனங்களில் விலையில் 6 சதவீதம் ஆண்டு வரியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இசைவனையில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு தற்பொழுது உள்ள காலண்டுக்கு ஒரு இருக்கைக்கு ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூ. 1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறங்கும் வசதி கொண்ட இருக்கை உள்ள வாகனங்களுக்கும் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி காலாண்டுக்கு உறங்கும் வசதிக் கொண்ட ஒரு இருக்கைக்கு ரூ. 1500 வரி விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுடன் பொருத்தப்பட்ட டிரெய்லர் அல்லது டிரெய்லர் பொருத்தப்படாத வாகனங்களான ரிக், ஜெனரேட்டர்கள், கம்ப்ரஸர்கள், கட்டுமான கருவிகள், கிரேன்கள் மற்றும் கோவேன்கள் ஆகியவைகளுக்கு தற்போது விதிக்கப்படும் ஆண்டு வரி ரூ. 3 ஆயிரம் மாற்றப்பட்டு, அந்தந்த வாகனங்களின் விலையில் 6 சதவீதம் ஆயுட்கால வரியாக விதிக்கப்படுகிறது.தற்போது மோட்டார் கார்களுக்கு அதனுடைய சுமையில்லாத எடையை கணக்கிடப்பட்டு ஆண்டு வரி மற்றும் ஆயுட்கால வரி விதிக்கப்படுகிறது. இனிமேல் வரியானது அந்தந்த வாகனங்களின் விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன்படி ரூபாய் 10 லட்சம் வரை உள்ள வாகனங்கள் அவற்றின் விலையில் 7 சதவீதம் கட்ட வேண்டும், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு முன் உள்ள விலையாகும்.மேலும் கல்வித்துறை வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஆண்டு வரி ஒரு இருக்கைக்கு ரூபாய் நுாறு லிருந்து ரூ. 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சேவை வாகனங்களுக்கு ஆண்டு வரி ஒரு இருக்கைக்கு ரூபாய் 150 லிருந்து ரூபாய் 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.புதுச்சேரி பகுதியில் நுழையும் மற்ற மாநில வாகனங்களுக்கு விதிக்கப்படும் நுழைவு வரியானது உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X