| ரயில்களை கண்டு குட்டீஸ் வியப்பு Dinamalar
ரயில்களை கண்டு குட்டீஸ் வியப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:36

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் செயல்பாடு பற்றி அறிய, பள்ளி மாணவர்கள் 'விசிட்' செய்தனர்.பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயா பள்ளியில், மழலையர் வகுப்பில் பயிலும், 86 மாணவர்கள் பொள்ளாச்சி நகருக்குள் சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.நகரத்தின் முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மகாலிங்கபுரம் மேல்நிலை தொட்டி, ரவுண்டானா பூங்கா, டிபார்ட்மென்ட் ஸ்டோர், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனுக்கு 'விசிட்' செய்தனர். ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களை பார்த்ததும், குட்டீஸ் குதுகலமடைந்தனர். ரயிலின் நீளம், வரிசையான பெட்டிகள், பிரமாண்டம் மற்றும் அதன் 'ஹாரன்' ஒலி ஆகியவை குழந்தைகளை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.ஆசிரியர்களிடம், ரயில் வண்டி தண்டவாளத்தில் இயங்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு, விளக்கம் பெற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X