ரூ.70 லட்சத்தில் 'அட்டண்டர்' தங்கும் விடுதி: அரசு மருத்துவமனையில் அமைகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:42

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர் தங்குவதற்கு விடுதி கட்டப்படுகிறது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, தினமும், 2,000க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற வருகின்றனர். 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.உள் நோயாளிகளின், 'அட்டண்டர்' தங்குவதற்கு இடவசதியில்லை. இதனால், மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியியில் தங்குகின்றனர்.


நோயாளிகளை தனியாக விட்டு, சிலர் வீட்டுக்கு செல்லும் நிலையும் காணப்படுகிறது. இதனால், அரசு மருத்துவமனையில், 'அட்டண்டர்கள்' தங்கும் அறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், நகராட்சி சார்பில் மருத்துவமனை வளாகத்தில் தங்கும் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரசவ வார்டு பகுதி அருகே, நேற்று இடம் ஆய்வு செய்யப்பட்டது. நகராட்சி கமிஷனர் கண்ணன் தலைமையில், அதிகாரிகள் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நோயாளிகள் உடன் இருப்பேர் தங்குவதற்கு விடுதி அமைக்க அரசு திட்டம் உள்ளது.


அதன்படி, மருத்துவமனை வளாகத்தில், தரைதளம் மற்றும் முதல் தளம் அமைத்து, 250 பேர் தங்கும் வகையில், 'பெட்' வசதி ஏற்படுத்தப்படும்.கழிப்பிடம் உள்ளிட்ட வசதியுடன், பொருட்களை பாதுகாப்பாக வைக்க, 'லாக்கர்' வசதியும் ஏற்படுத்தப்படும். ஒரு நாளைக்கு ஒரு நபர் தங்குவதற்கு, 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விடுதி கட்டடம், 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு, இரண்டு மாதத்தில் பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X