| காப்பீடு தொகை கிடைக்காததால் ஆவேசம் : வேளாண் அலுவலர்களோடு வாக்குவாதம் Dinamalar
காப்பீடு தொகை கிடைக்காததால் ஆவேசம் : வேளாண் அலுவலர்களோடு வாக்குவாதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:47

உடுமலை:பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு தொகை வழங்கக்கோரி, விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய அரசின், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் மக்காச்சோளம், கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் தேர்வு செய்யப்பட்ட பயிர்களாக அறிவிக்கப்பட்டது. வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் பயிர்கடன் பெற்ற விவசாயிகளும் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்திருந்தனர்.


2016 -17ம் ஆண்டு காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் இழப்பீடு தொகை வழங்கவில்லை. நடப்பாண்டின் துவக்கத்தில் நெல் மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. அதிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. விடுபட்டவர்களின் தகவல்கள் சேகரித்து மீண்டும் காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.இதையொட்டி, இழப்பீடு தொகை கிடைக்காத விவசாயிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், உடுமலையில், 435, மடத்துக்குளத்தில், 153 விவசாயிகளும், பதிவு செய்திருந்தனர்.கூட்டத்தின்போது, கூட்டுறவு கடன் சங்கங்களில் பதிவு செய்திருந்த விவசாயிகள் திடீரென வேளாண் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேளாண்துறையிடம் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை கிடைத்துள்ள நிலையில், கூட்டுறவு சங்கத்தில், பதிவு செய்த தங்களுக்கும், இழப்பீடு வழங்க வலியுறுத்தினர்.


வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர்கடன் பெற்ற விவசாயிகள் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் காப்பீடு செய்திருந்தனர். அதில், விவசாயிகளின் சான்றிதழ் தவறுகளால் வழங்கபட்ட, 92 லட்சம் ரூபாய் திரும்பியுள்ளதாக காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுபட்டுள்ள விவசாயிகளின் தகவல்கள் திரும்பவும் வழங்க அறிவுறுத்தபட்டுள்ளது. விரைவில், அனைவருக்கும் இழப்பீடு கிடைக்கும். இவ்வாறு, கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X