பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அளவிலான கலையருவி போட்டியில், மாணவ, மாணவியர் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அளவிலான கலையருவி போட்டிகள், வி.எஸ்.ஆர்.ஏ., நடுநிலைப்பள்ளி மற்றும் டி.இ.எல்.சி., பள்ளிகளில் நேற்று நடந்தது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டிகளை கல்வி மாவட்ட அலுவலர் (பொ) வெள்ளிங்கிரி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பிரசாந்த், எடிசன் பெர்னாட் முன்னிலை வகித்தனர். வி.எஸ்.ஆர்.ஏ., நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகளும்; டி.இ.எல்.சி., பள்ளியில், கிராமிய நடனம், பரதநாட்டியம், குழு நடனம், மாறுவேடப் போட்டிகளும் நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.