| பள்ளி பரிமாற்றம்... சிந்தனையில் புது மாற்றம்! Dinamalar
பள்ளி பரிமாற்றம்... சிந்தனையில் புது மாற்றம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:55

பெ.நா.பாளையம்:பள்ளி பரிமாற்றத்திட்டத்தால் கிடைக்கும் அனுபவம், தங்களது சிந்தனை திறனையும் முறையையும் மாற்றுவதாக, திம்மம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நகர்ப்புறத்தில் இருக்கும் அரசுப்பள்ளி மாணவர்களை கிராமப் பகுதிக்கும், கிராமப்பகுதியில் படிக்கும் மாணவர்களை நகர்ப்புற பள்ளிக்கும், ஆறு நாட்களுக்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்கின்றனர்.


ஒவ்வொரு ஒன்றியங்களிலும், ஆண்டுக்கு ஒரு பள்ளி தேர்வு செய்யப்படுகிறது. இதன்படி, திம்மம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், 30 பேர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ரங்கசாமிநாயுடு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர். பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற அவர்களை மலர்செண்டுகள் அளித்தும், பேண்ட் வாசித்தும் மாணவர்கள் வரவேற்றனர்.நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, திட்டத்தின் நோக்கம், பயன்பாடு குறித்து விளக்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை மலர்விழி, பள்ளியின் செயல்பாடுகளை எடுத்து கூறினார்.நிகழ்ச்சியில், சமக்ர சிக்சா திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிளாரன்ஸ், பன்முகத்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.


மாணவ, மாணவியர் தொடர்ந்து, ஆறு நாட்கள் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு பயிற்சிகளைப் பெற்றவுள்ளனர்.மாணவர்கள் கூறுகையில், 'நகர்ப்புற வாழ்க்கை முறைகள், சூழல், பள்ளியில் பாடம் நடத்தும் விதம், விளையாட்டுக்கள் உள்பட பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த அனுபவம், எங்களது சிந்தனை திறனையும் முறையையும் மாற்றுகிறது' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X