| 50 ரூபாய்க்கு ஒரு, 'பொட்டலம்' அன்னுார் போலீசார் தடுக்கணும்! Dinamalar
50 ரூபாய்க்கு ஒரு, 'பொட்டலம்' அன்னுார் போலீசார் தடுக்கணும்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
02:55

அன்னுார்:குமாரபாளையத்தில் வெளிப்படையாக 50 ரூபாய்க்கு ஒரு பொட்டலம் என, கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. போலீசுக்கு அதிலொரு பகுதி கமிஷன் செல்வதால் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது.அன்னுார் பேரூராட்சியை சேர்ந்த குமாரபாளையத்தில், புதிதாக ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இங்கு தங்கி பணிபுரிகின்றனர்.


இதில், பலரும் குடும்பத்தைப் பிரிந்து, இங்கு தங்கி பணியாற்றுகின்றனர். குறிப்பாக, வீட்டை வாடகைக்கு எடுத்து, மூன்று முதல் 10 பேர் வரை குழுவாக தங்கியுள்ளனர். இவர்களை குறிவைத்து, இப்பகுதியில் சில மாதங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.அப்பகுதியில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி அருகில், ஒரு பொட்டலம், 50 ரூபாய் என, வெளிப்படையாக விற்கப்படுகிறது.


இதில், போலீசுக்கும் கணிசமான தொகை லஞ்சமாகக் கொடுக்கப்படுவதால், இதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. கண்துடைப்புக்காக அவ்வப்போது ஓரிருவரை கைது செய்கின்றனர்.கஞ்சா குடிப்போர் போதையில் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, 'கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்து முறையான நடவடிக்கை எடுக்க அன்னுார் போலீசாரை மேலதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்' என, குமாரபாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X