| கட்டுத்தறி அல்ல... இது, கற்கண்டு கல்வி! Dinamalar
கட்டுத்தறி அல்ல... இது, கற்கண்டு கல்வி!
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:04

த த்தித்தத்தி தளர் நடை நடந்து, கண்கள் குளமாக, வேண்டா வெறுப்பாய் காலையில் பள்ளிக்குச் சென்று, மாலையில் கட்டுத்தறி அறுத்த துள்ளலுடன் ஓடிவரும் மழலைச் செல்வங்களை, பள்ளிக் குழந்தைகளை நாம் தினசரி பார்க்கிறோம்.கற்கண்டாய் இனிக்க வேண்டிய பள்ளிக் கல்வி, இன்று பல்வேறு நெருக்கடிகளால், பாகற்காயாக மாறிவிட்டதென்னவோ உண்மை. ஆனால், சோமனுாரை அடுத்துள்ள சாமளாபுரம் 'லிட்டரசி மிஷன் மெட்ரிக்' மழலையர் வகுப்பிற்குள் சென்றால், எப்போதும் குழந்தைகள் துள்ளி ஆடிக்கொண்டுள்ளனர். ஏனெனில், மழலையர் வகுப்புகள் அங்கு ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஏராளமான விளையாட்டு பொருட்கள், வண்ணமயமான வகுப்பறை, கணினித் திரை, அதில் ஏராளமான வீடியோ கேம்ஸ், விளையாட்டுக்கள், பாடல்கள், கார்ட்டூன்கள் என்று கலக்குகின்றனர்.அங்குள்ள யு.கே.ஜி., 'பி' வகுப்பறையில், 'டாக் சேய்ஸ் பவ்... பவ்... பவ்... கிளாப் யுவர் ஹேண்ட்ஸ்' என்று அந்த குட்டிக்குழந்தைகள் தவ்வித் தவ்வி கைதட்டுகின்றனர். தமது பிஞ்சுக் கைகளால் தட்டித்தட்டி ஆடுகின்றனர்.ஆசிரியர்களும், முதல்வர் சிவகாமியும், பள்ளியின் நிர்வாகி சுப்பிரமணியனும் அந்தக் குழந்தைகளுடன் குழந்தைகளாகவே குதுாகலத்தில் ஒன்றிப்போயிருந்தனர். இங்கு, கட்டுத்தறிக் கல்வி, அல்ல... கற்கண்டு கல்வி என்பது காணும்போது புரிந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X