திருச்சி ரோடு விரிவாக்க பணிகள் விறுவிறு: விபத்து குறையும் என்பதால் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:13

சூலுார்:விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருச்சி ரோடு விரிவாக்க பணிகள் வேகமாக நடப்பதால், சூலுார் வட்டார மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நாகப்பட்டினத்தில் இருந்து கோவை வழியாக கூடலுார் வரை செல்லும் திருச்சி ரோடு (என்.எச்; 81) தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.


கடந்த, பல ஆண்டுகளுக்கு முன், கரூரில் இருந்து காங்கயம்பாளையம் வரை இந்த ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், காங்கயம்பாளையத்தில் இருந்து சிந்தாமணிப்புதுார் வரையிலான, 7.5 கி.மீ., ரோடு மட்டும் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.இந்நிலையில், ரோட்டை பராமரிக்கும் பணி மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பகுதி குறுகலாக இருப்பதால், தினமும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள், சூலுார் வட்டார மக்கள் அச்சத்துடனேயே ரோட்டில் பயணம் செய்து வந்தனர்.மக்களின் பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பிறகு ரோடு விரிவாக்க பணிகள் துவங்கியுள்ளன. இரு கட்டங்களாக விரிவாக்க பணிகளை மேற்கொண்டு, நான்கு வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.


முதல் கட்டமாக. 1.8 கி.மீ., துாரத்துக்கு ரோட்டை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.இதற்காக, ரோட்டில் சிறு பாலங்கள் உள்ள இடத்தில், பக்கவாட்டில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு அகலப்படுத்தப்படுகின்றன. ராவத்துார் பிரிவில் இருந்து மேற்கே ரோடு விரிவாக்கம் செய்ய, பக்கவாட்டில் 'வெட் மிக்ஸ்' கொட்டி, சமன்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடக்கின்றன.போராட்டத்தின் வெற்றி!


இதுகுறித்து சூலுார் வட்டார மக்கள் கூறுகையில், 'சூலுார் சாலை விரிவாக்க குழு மற்றும் மக்களின் பல்வேறு கட்ட போராட்டங்கள், முயற்சிகளுக்குப்பின் விரிவாக்க பணி நடந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. விரிவாக்க பணிகள் வேகமாக நடப்பது, விபத்துகளுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X